யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் செய்க: புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி வலியுறுத்தல்

130 0

யுக்ரைனில் ரஷ்யா ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை பிரகடனம் செய்யுமாறு  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தொலைபேசி மூலம் உரையாடியபோது ஜனாதிபதி தையூப் அர்துவான் இதனைத் தெரிவித்தார் என துருக்கிய ஜனாதிபிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘அமைதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்குமான அழைப்பானது ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் நீதியான தீர்வுக்கான நோக்குகளினால் உதவப்பட வேண்டும்’ என அவர் கூறினார் என துருக்கிய ஜனாதிபிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.