மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
எனினும் தான் சக்தி வாய்ந்த தாயத்து ஒன்று கட்டியிருந்தமையினால் உடலுக்கு அருகில் செல்ல மறுத்த மஹிந்த, இறுதி அஞ்சலி செலுத்துவதனை புறக்கணித்துள்ளார்.
பின்னர் நாமல் ராஜபக்ச மற்றும் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீழ்ச்சியடைந்து வரும் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவே சக்தி வாய்ந்த மந்திர தகடுகள் பொருத்திய தாயத்தை மஹிந்த கட்டியுள்ளார்.
இதன் காரணமாக மரண சடங்குகளில் கலந்துக கொள்ள வேண்டாம் என மஹிந்தவின் சோதிடர்கள் மற்றும் சோதிடத்திற்கு தொடர்புடையவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதிடம் மற்றும் மூடநம்பிக்கைகளினால் பாதிக்கப்பட்டு தோல்வியை தழுவிய மஹிந்த, இன்னமும் சோதிடத்திற்கு பின்னால் சென்று அதிகாரத்தை கைப்பற்ற முயசிப்பதனை காண முடிவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.