நாட்டில் பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சொத்தி உபாலியின் முதல் மனைவியினது மகன் சஜித் ரந்திக என்பவர் 9 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை, மெனிங் டவுன் பகுதியில் வைத்து நேற்று (டிச. 4) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 4 வாள்கள் மற்றும் கத்திகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நபர் பல வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.