பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான வாக்குவாதத்தின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
38 வயதான இளவசர் ஹரி, Spare எனும் தனது நூலில் இதைத் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் இந்நூல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அந்நூலின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என இளவரசர் வில்லியம் கூறினாரெனவும், அதன்பின், தன்னை அவர் தாக்கினார் எனவும் ஹரி தெரிவித்துள்ளார்.
“அவர் எனது சட்டைக் கொலரை பற்றிப்பிடித்தார். எனது நெக்லஸை பிய்த்தார். என்னை தரையில் வீழ்த்தினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது நான் வீழ்ந்தேன். எனது முதுகின் கீழ் அப்பாத்திரம் உடைந்தது. அதன் சில துண்டுகள் எனக்கு காயமேற்படுத்தின” என மேற்படி நூலில் இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
புpன்னர் கவலையாக காணப்பட்ட வில்லியம், மன்னிப்பு கோரினார் எனவும் ஹரி குறிப்பிட்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என இளவரசர் வில்லியம் கூறினாரெனவும், அதன்பின், தன்னை அவர் தாக்கினார் எனவும் ஹரி தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
அதன்பின், ‘இது குறித்து மேகிற்கு (மேகன்) சொல்லத் தேவையில்லை’ என வில்லியம் கூறினார்.
நீங்கள் என்னைத் தாக்கியமை குறித்தா என ஹரி கேள்வி எழுப்பினார்.
‘நான் உங்களைத் தாக்கவில்லை’ என வில்லியம் பதிலளித்தார் எனவும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இளவரசர் ஹரியும். மேகன் மேர்கெலும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் அரச பணிகளிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.