தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு வேண்டி திருகோணமலையில் பேரணி

151 0

டக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (ஜன. 5) காலை 10 மணிக்கு திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டிய பதாதைகளுடன் இப்பேரணி இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவின் அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.