இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்திலிருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக பெறுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன.05) உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும், அவற்றை விசாரிக்குமாறும் கோரி சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உரிய தூதரக அறிக்கை கிடைத்த பின்னர் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது இலகுவாக இருக்கும் எனவும் அதுவரை உரியவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமற்றது எனவும் நீதிவான் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும்போது அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.