பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரு பெண்கள் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கொன்று தொடர்பில் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள 70 பவுண் தங்க நகைகளை விடுவித்துத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் நேற்று (04) காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்
இவர்களை இன்று (05) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.