காட்டில் வாழும் 72 வயதான தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திம்புலாகல மன்னம்பிட்டிய தலுகான பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காட்டில் தனித்து போன தான் 8 பிள்ளைகளை பெற்றவள் என இந்த தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.
நான்கு ஆண் பிள்ளைகளையும் நான்கு பெண் பிள்ளைகளையும் இந்த தாய் பெற்றெடுத்துள்ளார். பிள்ளைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். ஒரு மகன் இறந்து விட்டார். இவரது பிள்ளைகளில் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த தாயின் கணவர் 2002ம் ஆண்டு உடல் பாதிக்கப்பட்டு இறந்து போயுள்ளார். இறுதியில் இந்த தாய் தற்போது மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 8 பிள்ளைகளை பெற்றாலும் அனாதரவான நிலையில் தாய் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்