தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி

148 0

யால தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இம்மாதம் முதல் டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யால தேசிய பூங்காவில் இருந்து  இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவையான டொலர்களை ஈட்டிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

மேலும், யால தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் யாலவிற்கு வருகை தருவதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.