ஷானி அபேசேகரவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

148 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்த துப்பாக்கி மூலம்    ஷானி அபேசேகரவின்  கார் மீது  சூடு நடத்தப்பட்ட  சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது கடந்த டிசம்பர் 17ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன்போது காரில் எவரும் இருக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில், ஷானி அபேசேகர தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து  இந்தச் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.