அனுமதிப் பத்திரமின்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் பல்வேறு குழுக்கள் காணப்பட்டு வருவதாகவும், அது குறித்து அவதானமாக இருக்கும்படியும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமின்றி விமான பயண டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சிவில் விமான அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவ்வாறான முகவர் நிலையங்களிடமிருந்து விமான பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும், சட்டவிரோத முகவர் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் அதிகார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தை காட்சிப்படுத்தாத முகவர் நிலையங்களின் ஊடாக விமான பயணச்சீட்டு கொள்வனவு தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ள வேண்டாம் என அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.