ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றில் அழைக்கப்படாமல் நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (04) அழைக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக தினேஷ் ஷாப்டரின் மனைவி, அவர்களது நிறுவனமொன்றின் பணிப்பாளரான கிறிஸ் பெரேரா, மற்றும் பொரளை மயான ஊழியர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.