கோயம்புத்தூரில் 112 அடி சிவன் சிலை திறப்பு

442 0

தமிழ்நாடு – கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலையை இந்தியப் பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஸா யோக மையத்தால் இந்த 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினமான நேற்று இந்த சிலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.