அனைத்து நாடுகளுடனும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸின் குழுவினரை நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படுவதனைத் தவிர்த்து, நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை பலப்படுத்துதல், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் மேற்கொண்டுவரம் நல்லிணக்க செயற்பாடுகள், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகளை அமெரிக்க குழுவினர் பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.