மகா சிவராத்திரி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் அனுட்டிப்பு

507 0

மகா சிவராத்திரி விரதம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் அனுட்டிக்கப்பட்டது.

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் மகா சிவ ராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு நாடுமுழுவதுமுள்ள ஆலயங்கள் தோறும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை நான்கு ஜாமங்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

இந்தப் பூஜை வழிபாடுகளில் பெரும்பாலான இந்துக்கள் கலந்துகொண்டு, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.