இலங்கை மீனவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு தமிழக மீனவர்கள்; காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது தமிழகத்தின் கோடிக்கரை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை முதலில், துப்பாக்கி கொண்டு அச்சுறுத்திய இலங்கை மீனவர்கள், பின்னர் கூறிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியதாக பாம்பன் நாட்டு படகு சங்கத்தின் தலைவர் ஏ. அருள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நான்கு தமிழக மீனவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.