யாழ். மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில் இருப்பதாக யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் 27.1.2017 வரை யாழ். மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையின் சாவகச்சேரி, புத்தூர், உடுவில், பருத்தித்துறை களஞ்சிய சாலைகளில் 1,732,6824 கிலோக்கிராம் நெல் இருக்கின்றது.
இவற்றுள் சாவகச்சேரி களஞ்சிய சாலையில் 3,680 கிலோக்கிராம் சிகப்பு சம்பா, 54,335 கிலோக்கிராம் சிகப்பு நாடு நெல் காணப்படுகின்றது. புத்தூர் களஞ்சிய சாலையில் 10,103 கிலோக்கிராம் வெள்ளை சம்பா, 627,114 கிலோக்கிராம் சிகப்பு நாடு நெல் காணப்படுகின்றது. உடுவில் களஞ்சிய சாலையில் 15,700 கிலோக்கிராம் வெள்ளைச் சம்பா, 417,328 கிலோக்கிராம் சிகப்பு நாடு நெல் காணப்படுகின்றது. பருத்தித்துறை களஞ்சிய சாலையில் 3,300 கிலோக்கிராம் சிகப்பு சம்பா, 601,112 கிலோக்கிராம் சிகப்பு நாடு நெல் என மொத்தமாக 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில் இருப்பதாக தெரிவித்தார்.