களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான படகை செலுத்திச் சென்ற படகோட்டி, தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேருவளை, போகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருவளையிலிருந்து களுத்துறைக்கு படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.