154 கிலோகிராம் கேரளா கஞ்சா விநியோகம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நடவடிக்கையில் இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் உடுத்துறை கடற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடுத்த கட்ட விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
2016ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு கடற்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சுமார் 700 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.