பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் மிரிஹானை விஷேட குற்ற செயற்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம வைத்தியசாலைக்கு அருகில் கைது செய்யப்பட்ட இவர்கள் பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கை பிரதேசத்தில் கடந்த 15ம் திகதி வாளால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வடரெக பிரசேத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக காணப்பட்ட பகை காரணமாக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.