கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
கடுகண்ணாவ பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஜீப் வண்டி மீண்டும் பின்னோக்கி நகர்ந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாது போனதால் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
இதனையடுத்து காயமடைந்த வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேரும் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாவனல்லை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.