யாழ்ப்பாணம் தென்மராட்சியில், திருவேரகம் இசை நடனக் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது.
தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் உதவி செயலர் ரஞ்சனா நவரத்தினம் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் பொன்.
ஸ்ரீPவாமதேவன் மற்றும் விரிவுரையாளர் சி.மகேந்திரன், தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் புனிதா ஈழநேசன், அண்ணாமலை பல்கலைக்கழக விரவுரையாளர் ப.சிவமைந்தன், ஓய்வு பெற்ற இசைத்துறை ஆசிரியர் சுந்தரவல்லி ஆனந்தராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.