ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்…..(காணொளி)

313 0

 

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்கிசை மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம வீரசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மார்ச் 3ம் திகதி அடையாள அணி வகுப்பு நடைபெறும் போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான கீத் நிச்சயம் சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதவான், மீண்டும் அடையாள அணி வகுப்பு நடத்தப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 3 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லோசனா அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.