வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு…..(காணொளி)

338 0

 

வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக முஸ்லீம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்துகொண்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமீர் அலி, எனினும் எதிர்காலத்தில் நல்லெண்ணத்தை கைப்பற்ற வேண்டுமாயின் முஸ்லீம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பரிபூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.