வட மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதற்கு அப்பால், திருக்கேதீஸ்வரத்திற்கு அண்மையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்த தொல்பொருள் திணைக்களம், அதில் மூன்று ஏக்கர் காணியை பௌத்த விகாரை அமைப்பதற்கு வழங்கியுள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு இடையூறாக நாட்டில் காணப்படும் பயங்கரவாத பிரச்சினையை காரணம் காட்டிய அரசாங்கம், யுத்தம் நிறைவுபெற்று 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவில்லை என தெரிவித்தார்