முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இந் நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர் நேற்றையதினம் சென்றிருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.