சிறார்களை பலவந்தமாக தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள்!

266 0
சிறார்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பலவந்தமாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் இராணுவ தளபதி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் மோசுல் நகரை முழுமையாக மீட்பதற்கான போராட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஈராக்கிய படையினர் தரைவழியாக தாக்குதல் நடத்துகின்ற அதேநேரம், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரும் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மோசுலில் படையினர் முகம் கொடுக்கின்ற மிகப்பெரிய சவாலாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் நிலவுகின்றன.
இந்த தாக்குதல்களுக்கு சிறார்களும், விசேட தேவை உடையோருமே பயன்படுத்தப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.