இது தொடர்பாக அமெரிக்க பாடசாலைகளுக்கு “ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளது” என்று அமெரிக்க நீதித்துறை, கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்றாம் பாலின மாணவர்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி “வெறுப்பு இல்லை, பயம் இல்லை, திருநங்கை மாணவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மெக்ஸிகோ எல்லையில் சுவர், குடியுரிமை கொள்கையில் மாற்றம், 7 முஸ்லிம் நாடுகளின் மீதான தடை போன்ற டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் மூன்றாம் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.