கோர விபத்து – 16 பேர் காயம்

379 0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் கும்புரகமுவே வஜிர தேரர் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த ஜீப் வண்டி பாதையை விட்டு விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மொனராகலை – பிபிலபிரதான பாதையில் ஹூலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாய திசை நோக்கி பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் 5 பெண்கள், 3 சிறிய குழந்தைகள், மற்றும் சாரதி உட்பட 3 ஆண்களும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தெஹியத்தகண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.