சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும்…..(காணொளி)

282 0

முல்லைத்தீவு பிரதேச மக்களால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 22ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று 10ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னால், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மக்களின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.