திடீர் இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சபையின் தலைவர் காலோ பொன்சேகா தற்போது இருதய அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனை பேச்சாளர் ஒருவரிடம் இது தொடர்பாக வினவிய போது, அவருக்கு தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
திடீர் இருதய கோளாறு காரணமாக நேற்று மாலை அவர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.