ஹொங்கொங்கில்உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராணுவத் தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்த எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு இலங்கை அகதிகளை தேடி, இலங்கையின் புலனாய்வாளர்கள் அங்கு சென்றிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அகதிகள்துறை சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த விடயம் தங்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக குறித்த அகதிகள் சர்வதேச ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.