இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சர்வதேசஅமைப்புகள், பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தத்தின் பாதிப்புகள் தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் உள்நாட்டிலும் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஆனால் முன்னைய அரசாங்கம் ஆனாலும் தற்போதைய அரசாங்கம் ஆனாலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
காலம் தாழ்த்தும் நடவடிக்கையே இடம்பெறுகிறது.
எனவே மேலும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.