ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரப்பட இசை வெளியீட்டு விழா தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழீழ ஆதரவாளரான புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் ஆறாவது படைப்பாக உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாரக உள்ள ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழீழத்தின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் வரும் 26 ஆம் திகதி ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழ்தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறுகிறது.
கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவும் ஈழத்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடல் குதிரைகள் திரைப்பட குழுவினர் பங்கேற்கிறார்கள்.