சட்டவிரோதமாக அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) காலை எஹலியகொட, பஹலகம, ரிலாகும்புர வயல் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
நெல் மற்றும் மரக்கறி பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் மின் இணைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக எஹலியகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.