இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கும், ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கும் எதிராக மின்சாரத்துறை அமைச்சர் செயற்படுகிறார்.
இவரது தான்தோன்றித்தனமான கருத்துக்கள் வெறுக்கத்தக்கது. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மக்கள் பேரவை அமைப்பின் காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் மின்சாரத்துறை அமைச்சருக்கு கிடையாது,மின்சாரத்துறை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தனக்கு வழங்கப்பட்டுள்ளது என நினைத்துக் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் தான்தோன்றித்தனமான கருத்துக்களை குறிப்பிடுகிறார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமையவே மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் யாப்பின் 30 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நியாயமான முறையின் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்கட்டண விவகாரத்தில் இலங்கை பொதுப்பயன்பாடு பிறிதொரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகிறது.
மின்வலுத்துறை தொடர்பில் ஆணைக்குழுவிற்கும்,இலங்கை மின்சார சபைக்கும் இடையில் போட்டித்தன்மை நிலவுகிறது. இவர்களின் முரண்பாடுகளினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கும்,ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கும் எதிராக மின்சாரத்துறை அமைச்சர் செயற்படுகிறார்.
இவரது தான்தோன்றித்தனமான கருத்துக்களை வெறுக்கத்தக்கவை. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றம் செல்வோம்.அமைச்சரின் கருத்துக்கள் சமூக கட்டமைப்பில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்றார்.