தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை அலுவலகத்தில் நிதி மோசடி

119 0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ. ஜானக தெரிவித்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக நிறுவன மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இதுவரை  மேற்கொள்ளப்பட்டட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்திருந்தார்.

இது தொடர்பான அறிக்கையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வழங்கியதையடுத்து, அவரது பணிப்புரைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் கையேற்கவுள்ளது.