காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டின் இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது வரலாற்று சாதணையாகுடிமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான வரலாறாகும்.
கொவிட் 19 கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையான சேவைகளை மக்களுக்கு வழங்க ஆரம்பித்தது.
அதில் ஒன்றுதான் குழந்தை பிரசவங்களாகும். இதனடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2022 டிசம்பர் 28ம் திகதி இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் 508 சுகப்பிரசவங்கள் நிகழ்ந்தள்ளதுடன் இரண்டு குழந்தை வயிற்றுக்குள் மரணித்து பிறந்துள்ளன. இந்த வரலாற்றை அடைவதற்கு காரணமாக இருந்த இந்த விடுதியின் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுகள் ஊழியர்கள், சிற்றூழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதுட் பொது மக்கள் இந்த வைத்தியசாலையை எந்த வித்த அச்சமோ பயமோ இன்றி மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.