எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தை

95 0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்காக நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“.. உள்ளூராட்சி தேர்தல் என்பது பொதுமக்களின் உரிமையாகும். அதனை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் அது தோல்வியில் முடியும் முயற்சி என்பதோடு, எதிர்க்கட்சி உடனான கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறோம்.. இந்த குழுவின் ஏகமனதான ஒரு நிபந்தனை தான் எச்சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் முழுமை பெரும் வரையில் அது தொடர்பில் கதைக்கக்கூடாது என்பது..”