நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி இருப்புக்களை ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடைய உள்ளதாக அங்கு அவர் தெரிவித்தார்.
இதன்படி, ஜனவரி 5, 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஏற்றிய 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.