வெடித்து சிதறும் எரிமலை குழம்பின் அருகில் பயமின்றி நிற்கும் மனிதர்

133 0

வெடித்து சிதறும் எரிமலையின் குழம்பான லாவா அருகே நிற்கும் மனிதர் குறித்த வீடியோ ஒன்றை பார்த்த சமூக வலைதள பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ட்விட்டரில் வெளி வந்துள்ள இந்த வீடியோவில் எரிமலை குழம்பு பெருகி கடல் போல் காணப்படும் பகுதியில் இருக்கும் ஒரு பாறையின் விளிம்பு பகுதிக்கு ஒரு மனிதர் மெதுவாக செல்கிறார். அவருக்கு அருகில் எரிமலை குழம்பு தீப் பிழம்புடன் வந்து விழுகின்றது.

தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் அவர் கையில் வாக்கி-டாக்கியை வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஆய்வாளராகவோ அல்லது எரிமலை குறித்து ஆய்வு செய்பவராகவோ இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை.

இதை பார்த்த பலர் திகைப்புடன் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர். முழு அளவில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எரிமலை கடலுக்கு அருகே இவ்வளவு நெருக்கமாக அந்த மனிதனால் எப்படி செல்ல முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பினர். ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. 5433 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.56,000 க்கும் மேற்பட்டோர் வீடியோவை விரும்பியுள்ளனர்.