படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் இராணுவத்தால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தாம் கூறி இருந்த கருத்து தொடர்பில் அவர் விளக்கமளித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களிடம் அவர் கடந்த வாரம் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தாம் கூறிய கருத்து பிழையாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளார். தாம் முழுமையாக அனைத்து இராணுவம் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.