ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு ISO தரச் சான்றிதழ்

312 0

ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (HAC) இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தால் (SLSI) ISO 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தில் வைத்து பணிப்பாளர் காமினி தர்மவர்தனவினால் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் சர்வதேச விவகார தலைவர் எம்.ஜே.எம். பாரியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது ஹலால் சான்றுறுதிப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பளார் அலி பாதரலி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.