கடுவலை, வெலிப்பில்லவில் கடத்தப்பட்டு, பின்னர் வெட்டப்பட்டும் சுடப்பட்டும் பலத்த காயமடைந்த நிலையில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டு இன்று (26) அதிகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பூ பறிக்க வந்த நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதை கண்டு அவரின் அருகில் சென்று பார்த்து அவருடன் பேசியபோது, தான் கடவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் ஒரு குழுவினரால் தான் கடத்தப்பட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு பின்னர் தன்னைச் சுட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பூ பறிக்க வந்த நபர் 1990 அம்யியூலன்ஸுக்கு தகவல் வழங்கி வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து குறித்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடுவல பொலிஸார் தெரிவித்தனர்.