மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலிம்பட பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 57 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாயாவார்.
தம்பெல்ல பிரதேசத்தில் இறப்பர் தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்தபோதே 40 வயதுடைய திருமணமான ஒருவர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.