இந்து சமய அறநிலையத்துறை நிலம் குத்தகை காலம் 5 ஆண்டுகளாக உயர்வு

107 0

இந்து சமய அறநிலையத்துறையின் நிலத்துக்கான குத்தகைக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத் துறையின் அசையா சொத்துகளின் குத்தகை உரிமம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் கோயில் நிர்வாகிகளால் பொது ஏலம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டால் மட்டுமே குத்தகை சொத்தை முழுமையாக குத்தகைதாரரால் பயன்படுத்த இயலும் என்ற கோரிக்கை வரப்பெறுகிறது.

மேலும், 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்தை காலி செய்து சுவாதீனம் பெற்று பொது ஏலம் மூலம் நிர்வாகத்தால் மீண்டும் குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சொத்தை சுவாதீனம் பெற இயலாத நிலை ஏற்படுகிறது.

கட்டமைப்பு வசதிகள்: எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துகளை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் வழங்கினால் மட்டுமே, குத்தகைதாரர் அவரது பயன்பாட்டிற்கேற்ப, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு சொத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.