யாழ். பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

481 0

blogger-image--637589395யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலையின் அனைத்து பீடங்களையும் காலவரையின்றி மூடுவதாக பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போது, எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இந்த சம்வங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட, பல்கலைக்கழகமே கலவரமாக காணப்பட்டது.

இதனை அடுத்து விஞ்ஞான பீட மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கூடிய யாழ்.பல்கலைக்கழக பேரவை, குறித்த மோதல் சம்வத்தில் மாணவர்கள் பாதிப்படையாத வகையில் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விரிவுரையாளர்களும் மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்வி சார் நடவடிக்கைகளை தொடர்வதற்கு, ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம். என யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.