கருணாவை கொலை செய்ய முயற்சித்தவர் யார்? பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது

266 0

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள கோவில் ஒன்றுக்கு கருணா சென்ற வேளை, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சந்திவேல் பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கருணா மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுககு சென்றுள்ள போது, பலவந்தமான அவரது உடம்பில் மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெறிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடந்த காலங்களில் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளவர்களும், தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவ்வாறான அச்சுறுத்தலை முன்னாள் போராளிகள் விடுத்து வருவதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.