தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் என்ற அங்கீகாரம் கிடைக்காது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தேசிய சுதந்திர முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் விலகிக் கொண்டுள்ளதாகவும், சுயாதீனமாக நாடாளுமன்றில் இயங்க உள்ளதாகவும் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறு சுயாதீனமாகிய போதிலும் நாடாளுமன்றில் விமல் வீரவன்சவிற்கு கட்சித் தலைவர் அந்தஸ்தோ வரப்பிரசாதங்களோ கிடைக்காது.
நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் விமல் வீரவன்ச கூட்டமைப்பிலிருந்த விலகியிருக்கலாம்.
எனினும், விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களாகவே தேர்தலில் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றில் சுயாதீனமானால் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவிற்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களே விமல் வீரவன்சவிற்கும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.