அமெரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையும், கணிதவியல் அறிஞருமான கென்னத் ஜே ஆர்ரோ தன்னுடைய 95 வயதில் மரணமடைந்துள்ளார்.
கடந்த 1972-ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இங்கிலாந்தின் சர் ஜான் மற்றும் கென்னத் ஜே ஆர்ரோ ஆகியோர் கூட்டாக பெற்றிருந்தனர். அமெரிக்கா நாட்டில் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள பாலோ நகரில் வசித்து வந்த ஆர்ரோ, கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், 95 வயதான ஆர்ரோ நேற்று காலை தனது இல்லத்தில் காலமானார். பொருளாதார மேதையான இவர் அடிப்படைக் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். மேலும், பொருளாதார கோட்பாடுகள் கொண்ட பல புத்தகங்களையும் ஆர்ரோ எழுதியுள்ளார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆலோசகரகவும் ஆர்ரோ பணியாற்றி வந்தார். தனது தந்தை அனைத்து துறைகளிலும் ஆர்வம் செலுத்தியதாகவும், அவரது மறைவு பொருளாதார துறைக்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் பேர் இழப்பு என ஆர்ரோவின் மகன் தெரிவித்துள்ளார்.